Categories
உலக செய்திகள்

சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சோதனை… கடலில் மூழ்கடிக்க திட்டம்… என்ன நடந்தது…?

நாசா காலாவதியான கருவிகள் மற்றும் பாகங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்க தீர்மானித்திருக்கிறது.

ஐரோப்பா, ஜப்பான், கனடா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் சேர்ந்து தோற்றுவித்த சர்வதேச விண்வெளி நிலையம், கடந்த 1998 ஆம் வருடத்திலிருந்து விண்வெளியில் இயங்கிக்கொண்டிருக்கிறது. அங்கு விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கியிருந்து, பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தினுடைய முக்கியமான உபகரணங்கள், கருவிகள் மற்றும் பாகங்கள் போன்றவை 80% காலாவதியானது. இதில், உண்டான சிறிதான விரிசல்கள் மோசமாகி மிகப்பெரிய விரிசல்களாக மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, நாசா இந்த விண்வெளி நிலையத்தை பசிபிக் கடலில் மூழ்க செய்ய திட்டமிட்டிருக்கிறது.

இந்த பணி விரைவில் நடக்கவிருக்கிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் இருக்கும் ‘விண்கலத்தின் கல்லறை’ என்று அழைக்கப்படும் பாயின்ட் நெமோ என்னுமிடத்தில் அந்த விண்வெளி நிலையத்தை மூழ்கடிக்கவுள்ளனர்.

Categories

Tech |