அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு, ஒத்தி வைக்கப்பட்ட, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பக்கூடிய திட்டத்தை வரும் 2026-ஆம் வருடத்திற்குள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க விண்வெளி மையமான நாசா கடந்த 1969 ஆம் வருடம் ஜூலை மாதம் 20ஆம் தேதியன்று முதல் முறையாக அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகிய இரண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதன்பின் நாசா பல முறை நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சோதனை மேற்கொண்டதில் அதிகம் செலவானது.
எனவே, அதற்குப்பின் மனிதர்களை அனுப்பவில்லை. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில், நிலவிற்கு மனிதனை அனுப்பும் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், வரும் 2025ம் வருடத்தில் அதற்கான பணி மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.
எனவே, ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த வாரத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் திட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு, இத்திட்டத்தை துல்லியமாக மதிப்பிட நாசா தவறிவிட்டது என்றும் இத்திட்டம் வரும் 2026ஆம் வருடத்திற்குள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருக்கிறது.