Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி வினியோகிக்க அமெரிக்கக நிறுவனத்துடன் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் வைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாகி வரும் நிலையில் இன்னும் எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக் கழகம் தயாரித்து இருக்கும் சிம்ப்-அடினோவைரஸ்’ எனப்படும் இந்த தடுப்பூசி, எபோலா வைரஸ் மற்றும் காசநோய் போன்ற பிற தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. விரைவில் இதற்கான முதல் கட்ட மருத்துவ பரிசோதனை நடக்க இருக்கும் நிலையில், இந்தியாவில் தேவையான ஒழுங்குமுறை அனுமதியை பெற்றதும், அடுத்த கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தவும், உற்பத்தி செய்யவும், பாரத் பயோடெக் நிறுவனம், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Categories

Tech |