நாகநாதர் கோவிலில் 8 வருடங்களுக்கு பிறகு சிறப்பு யாகபூஜை நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியில் பழமையான நாகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு யாக பூஜை தமிழ் முறைப்படி நடைபெற்றுள்ளது. மேலும் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 8 வருடங்கள் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சிறப்பு யாக பூஜையின் போது யாக கலசங்கள், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி திருவீதி உலா கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாகநாதர், நாவுக்கரசி அம்மனுக்கு கலச நீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மற்றும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றுள்ளனர்.