Categories
கிரிக்கெட் விளையாட்டு

“குழந்தையை பார்க்கும் ஆசையைவிட” நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி – நடராஜன் நெகிழ்ச்சி…!!

குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி முடிந்த பிறகு கடந்த வியாழனன்று தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு கிராம மக்கள் சார்பில் மேளதாளத்துடன் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சர்வதேச போட்டிகளில் விளையாட  உறுதுணையாக இருந்தது.டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்ததால் வெற்றிக் கோப்பையை கையில் வாங்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணியினர் என்னை முழுமையாக ஆதரித்தார்கள். என்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆவலை விட நாட்டுக்காக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |