தமிழக வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடியவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். இவர் தன்னுடைய தாயகம் திரும்பி தந்து சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஊரிலுள்ள பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து மேளதாளத்துடன் அமோகமாக வரவேற்றனர். இந்நிலையில் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளார்.
இவர் கோவிலுக்கு வந்ததை அறிந்த ஏராளமான யக்கர் மன்னா நடராஜனின் ரசிகர்கள் அவரை காண திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடராஜனை பத்திரமாக அழைத்து சென்றுள்ளனர்.