Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு கடத்த முயற்சி…. பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள்…. சென்னையில் பரபரப்பு….!!

விமானத்தில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு சரக்கு விமானம் ஒன்று செல்வதற்கு தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் கொண்டு செல்வதற்காக வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 15 பெட்டிகளை தாய்லாந்திற்கு கடத்த முயன்ற 2247 நட்சத்திர ஆமைகளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பார்சலில் எழுதியிருந்த முகவரியை சோதனை செய்த போது அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் சுங்க இலாகா அதிகாரிகள் நட்சத்திர ஆமைகளை வன உயிரின அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டனர். மேலும் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்றவர்களின் விவரம் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |