ராஜஸ்தானில் நட்சத்திர ஓட்டலில் எம்.எல்.ஏக்களின் கொண்டாட்டத்தை மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கண்டித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியானது நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக பணியாற்றிய சச்சின் பைலட் அவர்கள் தன் ஆதரவாளர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகிய 18 நபர்களுடன் இணைந்து கெலாட் அரசிற்கு எதிராக போர் கொடியினை தூக்கி இருக்கின்றார். இத்தகைய காரணத்தால் கெலாட்டின் ஆட்சி எந்த சமயத்திலும் கவிழக்கூடிய சூழ்நிலையானது உருவாகியுள்ளது. இச்சூழ்நிலையில் குதிரை பேரம், கட்சித் தாவல் நடவடிக்கையினை தவிர்க்கக் கூடிய வகையில் அவர்களின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் இருக்கின்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது பாடல் பாடுவது உணவு உண்பது போன்ற புகைப்படங்களை இணையத்தளங்களில் பதிவிட்டு கொண்டிருக்கின்றனர்.
மேலும் உலக மக்கள் அனைவரும் கொரோனா தாக்கத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் இத்தகைய சமயத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஹோட்டலில் ஆடம்பரச் செலவு செய்து மகிழ்ச்சி கொண்டிருக்கும் செயலானது பெரும் கண்டனத்துக்குரியதாக மத்திய ஜல சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெராவத் கூறியுள்ளார். இதனைப் பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா வைரஸ்-யை எதிர்த்து போராடக்கூடிய நேரத்தில் நீங்கள் பாடல்களை பாடிக் கொண்டூருக்கிறீர்கள். ஏழை மக்களுக்கு உணவு கொடுக்கும் இத்தகைய நேரத்தில் நீங்கள் இத்தாலிய சமையலினை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் ராஜஸ்தான் மக்கள் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் அவர்கள் அனைத்து செயல்களையும் அறிவார்கள் என்று கஜேந்திர சிங் ஷெகாவத் பதிவிட்டுள்ளார்.