Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரன் அவுட்டிலிருந்து தப்பிக்க பவுலரின் தலைக்கு மேல் குதித்த பேட்ஸ்மேன்.!!

பிக் பாஷ் கிரிக்கெட் தொடரின்போது ரன் அவுட் ஆகாமல் இருக்க, பேட்ஸ்மேன் பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் குதித்து காயமடைந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஷ் கிரிக்கெட் லீக் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 47ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஆடியது. முதலில் பேட்டிங் ஆடிய ஹோபர்ட் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து மெல்போர்ன் அணிக்கு தொடக்க வீரர்களாக ஹாரிஸ் – மார்ஷ் இணை களமிறங்கியது. இதில் ஹாரிஸ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சாம் ஹார்ப்பர் களமிறங்கினார்.

sam-harper-faced-a-massive-blow-during-their-big-bash-league-bbl-match-against-hobart-hurricanes

அப்போது நான்காவது ஓவரை நாதன் எல்லிஸ் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஹார்ப்பர், மிட் ஆஃபில் அடித்து ஒரு ரன் ஓடினார். அவரை ரன் அவுட் செய்யும் முனைப்பில் பந்துவீச்சாளர் ஸ்டம்புக்கு அருகே குனிந்து பந்திற்காக காத்திருக்க, ரன் ஓடி வந்த ஹார்ப்பர் கட்டுப்பாட்டை இழந்தார்.

Image result for Nathan Ellis got a closer look at the Sam Harper tumble than anyone

இதையடுத்து பந்துவீச்சாளர் மீது மோதக்கூடாது என்பதற்காக அவரின் தலைக்கு மேல் தாண்டி குதிக்கையில், நிலை தடுமாறி ஹார்ப்பர் கீழே விழுந்தார். இதில் ஹார்ப்பருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து வலி ஏற்பட்டதால் ரிட்டையர்ட் ஹர்ட் செய்து அவர் பெவிலியன் திரும்பினார்.

Categories

Tech |