Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா யாரை திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா….? இது லவ் மேரேஜா…? அரேஞ்ச் மேரேஜா…?

நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணமாகவுள்ளது. 

நடிகை ஹன்சிகா தற்போது தான் மீண்டும் பிசியாக நடிக்க தொடங்கி இருக்கின்றார். அவர் “மஹா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் படம், இயக்குனர் ஆர் கண்ணனின் அடுத்த படம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் ஹாரர் காமெடி படம் கடந்த வாரம் தான் பூஜையுடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பர் மாதம் ஜெய்ப்பூர் கோட்டையில் ராயல் திருமணம் நடைபெறுகின்றது என தகவல் வெளியாகி இருக்கிறது.இதனை அடுத்து நடிகை ஹன்சிகா மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான்  திருமணம் செய்ய இருக்கிறார். இது முழுக்க முழுக்க arranged மேரேஜ் தான் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகாவுக்கு அவரது அம்மா தான் மாப்பிள்ளை பார்த்து திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் எனவும் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இந்த திருமணம் பற்றி ஹன்சிகா அல்லது அவரது அம்மா இதுவரை எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |