நடிகர் கார்த்தி நடிக்கும் மூன்று திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக இரண்டாம் பாகப் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்களவில் வர ஆரம்பித்துள்ளது. இந்த திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன.
இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை? பலரும் எழுப்புவது வழக்கமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வெளிவந்துள்ள “சர்தார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டிங்கில் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நடிகர் கார்த்தி நடித்து அடுத்த வருடம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரவுள்ளது.
இதனை தொடர்ந்து “கைதி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளோம் என்றும் கார்த்தி நேற்று சொன்னார். மேலும் “சர்தார்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் சொன்னதால் அடுத்தடுத்து மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி நடிக்கப் போகின்றார். தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களில் வேறு எந்த ஒரு நடிகரும் நடித்தது இல்லை. “பொன்னியின் செல்வன் 2” அடுத்த வருடம் கண்டிப்பாக வந்துவிடும். “கைதி மற்றும் சர்தார்” ஆகியவற்றின் இரண்டாம் பாகம் சொன்னபடி நடந்தால் அது சிறப்பான விஷயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.