தமிழ் நடிகர் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்டது.
தமிழ் நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியுள்ளது. இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகின்றார். ஒளிப்பதிவு வேலைகளை ஓய்.என்.முரளி கவனிக்கின்றார்.
சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கின்றது. மேலும் இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குனர், நடிகர், ரங்கநாதன், இயக்குனர் பி. வி. பிரசாத், இயக்குனர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.