இந்தியாவில் நாடு முழுவதும் ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் வினியோகம் திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை காட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நாடு முழுவதும் வழங்கும் திட்டத்தை மத்திய அமைச்சகம் நேற்று தொடங்கியுள்ளது. இந்த மருந்துகள் நல்ல பலனை தருவதாகவும் சோதனையில் தெரிய வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு இதை தொடங்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். லேசான அறிகுறி மற்றும் லேசான மிதமான வரையிலான கொரோனாவுக்கு நோயாளிகள் ஆயுஷ் 64 மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது சிறந்த பலனை அளிப்பதாகவும், வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிகள் இதை பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைப்பதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.