Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் “தேசிய விவசாய சந்தை”…நிர்மலாசீதாராமன்..!!

நாடு முழுவதும் உள்ள  விவசாயிகள் நேரடி விற்பனையில் ஈடுபட தேசிய விவசாய சந்தை அமைக்கப்படுவதாக   நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2019-20க்கான பட்ஜெட் மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது.இது குறித்து பேசிய   நிர்மலா சீதாராமன் , மாநிலங்கள் முழுவதும்  உள்ள  விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருளை நேரடியாக  விற்று பயன் பெற   தேசிய விவசாய சந்தை அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் இருக்கும்  விவசாயிகள் 1ரூபாய் கூட முதலீடு செய்யமால்  விவசாயம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் .

Image result for nirmala sitharaman vs aathaar

தொடர்ந்து பேசிய அவர் , வருகின்ற 2022 ஆம் ஆண்டுக்குள்  விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக  அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.  மேலும் 33,000 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க பசுமை தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக்கை பயன்படுத்த நடவடிக்கை   எடுக்கப்படும் என்றும் மத்திய நிதித்துறையமைச்சர் நிர்மலாசீதராமன்  தெரிவித்தார்.

Categories

Tech |