கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. இதில் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனங்களும் அடங்கும். இவை இன்னும் இயல்பு நிலைமைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்வதேச விமான நிறுவனங்களின் அமைப்பான சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் வருடாந்த கூட்டம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஸ் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விமான போக்குவரத்து சரிவை சந்தித்து வந்துள்ளது. இதனால் ரூபாய் 15 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது விமான போக்குவரத்துகொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி விட்டாலும் 2023ம் ஆண்டு தான் இவை லாபத்தை சந்திக்கும். மேலும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் கடும் சரிவை சந்தித்துள்ளன. இந்தியாவில் தற்போது தான் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை சற்று மேம்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.