நடிகை ஆண்ட்ரியாவிற்கு தேசிய விருது கிடைக்கப் போவதாக பிரபல நடிகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைகோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனரான மிஷ்கின் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும், கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடிய மிஷ்கின் பிசாசு2 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா மிகவும் சிறப்பாக நடித்து இருப்பதாகவும், இதனால் அவருக்கு இப்படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.