தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார்.
இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சூரரை போற்று திரைப்படத்திற்காக தயாரிப்பாளர் ஜோதிகாவும் பெற்றுக்கொண்டார்கள். மேலும் இத்திரைப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கார, கதாநாயகி அபர்ணா பாலமுரளி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோருக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்திருக்கின்றார்.
Congrats 🥳 https://t.co/qYqahuLVqm
— A.R.Rahman (@arrahman) October 1, 2022