தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு தல அஜித் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசை அமைத்த டி.இமானுக்கு சிறந்த தேசிய இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தல அஜித்தும் இமானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் மிகுந்த சந்தோசத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.