Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி, தனுஷ் …. பயின்ற பள்ளியில் இருந்து வந்த வாழ்த்து…. வைரலாகும் வீடியோ…!!

தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி மற்றும் தனுஷிற்கு அவர்கள் பயின்ற பள்ளியில் இருந்து வாழ்த்துக்கள் வந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான 67வது தேசிய திரைப்பட விருது சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. அதில் அசுரன் படத்திற்காக தனுஷிற்க்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் படித்த தாய் சத்ய எம்ஜிஆர் பள்ளியின் நிறுவனரும் நடிகருமான தீபன் தேசிய விருது பெற்ற அவர்கள் பள்ளி மாணவர்களை வாழ்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எம் ஜி ஆர் பள்ளி மாணவர்களான தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஒரே ஆண்டில் தேசிய விருது பெற்றிருப்பது பெருமையாக இருக்கிறது.

மேலும் பள்ளியின் தாளாளர் என்ற முறையிலும் அனைத்து மாணவர்களின் சார்பாகவும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |