Categories
மாநில செய்திகள்

தேசிய கல்விக் கொள்கைக்கு பரிந்துரை… 7 பேர் கொண்ட குழு…!!

தேசிய கல்விக் கொள்கை வழங்குவதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு அளித்துள்ளது.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை உயர்நிலை கல்விக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என இரு குழுக்கள் அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதனால் தற்பொழுது தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக  அரசுக்கு பரிந்துரைகளை வழங்க 2  குழுக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் இதற்காக 7 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

இதில் முதற்கட்டமாக, உயர்கல்வித்துறையில் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, திருவள்ளூர், அண்ணா, இதுபோன்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களான துணைவேந்தர் பிச்சுமணி, . துணைவேந்தர் ராஜேந்திரன், துணைவேந்தர் கிருஷ்ணன், . துணைவேந்தர் தாமரைச் செல்வி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |