தேசியக்கொடிக்கு உரிய மரியாதை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் தேசியக் கொடி, தேசிய கீதம் போன்ற தேசிய கவுரவச்சின்னங்களுக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு 2002 மற்றும் தேசிய தேசிய கவுரவச்சின்னங்களை அவமதித்தல் தடுப்பு சட்டம் 1971 ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்றுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமான தேசிய, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் காகிதத்தில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்.
அந்த நிகழ்வுக்குப் பின் இந்த கொடியை தரையில் வீசிவிட்டு செல்லக்கூடாது. தேசியக்கொடிக்கு உரிய கண்ணியத்துடன் தனிப்பட்ட முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். காகிதத்தால் செய்யப்பட்ட கொடிக்கு பதிலாக பிளாஸ்டிக் கொடியும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை காகித கொடிகள்போல விரைவில் மக்கும் தன்மை கொண்டவை அல்ல. மேலும் நீண்ட காலத்திற்கு சிதைவடையாது. அத்துடன் இந்த கொடியை அகற்றி அப்புறப்படுத்தும் நடைமுறை சிக்கலாகும்.
பொது இடத்தில் அல்லது பொதுமக்கள் முன்னிலையில் தேசிய கொடியை எரித்தல், சிதைத்தல் அளித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல் தேசிய கீதம் பாடும் போது ஒருவர் வேண்டுமென்றே தடுத்தால் அல்லது இடையூறு ஏற்படுத்தினர் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.