Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம்…. டி.இமான் மகிழ்ச்சியுடன் ட்விட்…!!

தமிழ் இசைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்று டி.இமான் தெரிவித்துள்ளார்.

67 வது தேசிய திரைப்பட விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் விஸ்வாசம் படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமானுக்கு சிறந்த தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடவுளின் மகிமை, என் பெற்றோரின் ஆசீர்வாதம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இசை பிரியர்களின் ஆதரவால் இது நடந்துள்ளது.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது எனக்கு அறிவித்திருப்பதால் நான் மகிழ்ச்சியுடன் உள்ளேன். அதுவும் தமிழிசைக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்திருப்பது தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |