இந்தியா இன்று உலக வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் தேசிய ஒற்றுமையே ஆகும். சாதாரண பறவைகள், விலங்குகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும். மேலும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதுபோல பல இனங்கள் பல மொழிகளைக் கொண்ட நமது இந்திய நாடு இன்று வரை பிரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே ஆகும். உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் அனைத்தும் ஒற்றுமை மிக்க தேசங்களாகவே இதுவரை இருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் இன்று உலகின் முதல் தர நாடுகளாக இருக்க காரணம் அவர்களது ஒற்றுமையை ஆகும். மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தையே வெல்ல காரணம் அவரது பலம் பொருந்திய ஒற்றுமை மிக்க படைகளே ஆகும். மக்களிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்றால் ஒவ்வொரு மனிதர்களும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர வேண்டும். ஒற்றுமையாக அனைவரும் ஒருமித்து செயல்பட்டால் தான் எதனையும் சாதிக்க முடியும். அனைவரும் ஒன்றுபட்டால் இந்திய தேசத்தின் வளர்ச்சி விண்ணை தொடும். மேலும் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் தானாக நடந்தேறும்.