எந்த மாநிலமும் ரயில் சேவையை நிறுத்த அனுமதி கூறவில்லை என ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
புதுடெல்லியில் ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் இணையதளத்தில் கொரோனா கால நெறிமுறைகளை மாநிலங்களால் பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதன்பின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கிற போது தேவைப்பட்டால் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்துகொள்ளலாம் அல்லது கொரோனா தொற்று இல்லை எனக் காட்டும் சான்றிதழ்களை பயணத்தின் போது எடுத்துச் செல்லலாம் என அறிவுறுத்துகின்றனர்.
தற்போது வரை எந்த மாநில அரசும் ரயில் சேவையை நிறுத்துமாறு வலியுறுத்தவில்லை. ஆனாலும், மாநில அரசுகள் கொரோனா பிரச்சனைகளைக் குறித்து எங்களோடு விவாதித்து உள்ளது. கொரோனா கட்டுப்பாடு நிறைந்த மண்டலங்களில் பரிசோதனைகள் நடத்துகின்றார்கள். இ-டிக்கெட் இணையதளத்தில், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா? கொரோனா இல்லை என்ற சான்றிதழை கொண்டு வரவேண்டுமா? என்பது குறித்து தகவல்கள் ரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டாயம் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகின்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பயணிகளுக்கு அபதாரம் விதிக்கப்பட்டு வருகிறது. சிராமிக் சிறப்பு ரயில்கள் விடுவதற்கு வாய்ப்பு இல்லை. அதன்பின் கொரோனா தொற்று பரவும் வகையில் ரயில் நிலையங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுகின்றன. இதனைத் தடுக்க பல ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 4000 தனிமைப்படுத்தும் பெட்டிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பாரில் இருந்து 100க்கும் அதிகமான பெட்டிகள் கேட்டு கோரிக்கை எழுந்துள்ளது. அதனால் 20 தனிமைப்படுத்தும் பெட்டிகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ரயில்வே நிறுவனம் தினமும் 1,490 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களையும், 5,398 புறநகர் ரயில்களையும் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கு 140 கூடுதல் ரயில்களையும் இயங்குகின்றது. இந்த மாதமும், அடுத்த மாதமும் 140 ரயில்கள், 483 சேவைகள் வழங்குகின்றன என ரயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.