நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 51.08% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,419 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,69,797 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 325 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,424 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,53,106 ஆக உயர்ந்துள்ளது.