ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ஜனவரி 16 ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திங்களன்று சீரம் நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு மிக முக்கிய நடவடிக்கையை மேற்கொள்கிறது.
நமது துணிச்சல்மிக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தியா முழுவதும் தடுப்பூசி போட 5000 இடங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் அறிவித்தலின் படி டெல்லியில் உள்ள 89 மருத்துவமனைகளை, டெல்லி அரசு தயார் செய்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடும் பணியை 8 முதல் 9 பேர் கையாளுவார்கள். முதற்கட்ட பணியை ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.