Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளில்… வெளியான மாஸ் அறிவிப்பு…. கொண்டாடும் பெற்றோர்கள் …!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து  பல்வேறு சுகாதார நடவடிக்கை மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வகைகளையும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான உணவு முறைகளை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது.

அதன்படி, பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகியவற்றை இணைக்க மத்திய மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் காளான், தேன் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணங்கள் உள்ளன. காளானில் ஃபோலிக் ஆசிட் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். தாவர உணவான காளானில் வைட்டமின் பி12, பொட்டாசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளன.  ஊட்டச்சத்துக்களை அடிப்படையாகக் கொண்டு காளான் மற்றும் தேன் மதிய உணவில் இணைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிசீலிக்கலாம். இதனால் காளான்,தேனின்  உற்பத்தியும்  அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |