Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே பட்டியல் – மத்திய அரசு புதிய திட்டம் ….!!

நாடு முழுவதும் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை தயாரிக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததை அடுத்து…. அவ்வப்போது புதுப்புது திட்டங்களையும், சட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் புதிய திட்டம் அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே விதமான வாக்காளர் பட்டியலை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கேபினட் செயலாளர் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் உடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |