மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யபட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முதலமைச்சர்கள் சபாநாயகர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமூக இடைவெளி, கிருமினாசினி தெளித்தல், முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின் இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு, போன்ற பல குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. ஆனால் அங்கு பங்கேற்ற எம்பிக்கள் சில பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அங்கு வந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் எம்பிக்களில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட எம்பிக்கள் 17 பேருமே மக்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் பாஜக எம்பிக்கள் 12பேர் உள்பட 17 எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.