நாடு முழுவதும் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த விவரங்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மூன்று கட்ட மூன்றாம் கட்ட தளர்வு அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் ( 31ஆம் தேதியோடு ) இந்த தளர்வு நிறைவடைய இருக்கும் நிலையில், மத்திய – மாநில அரசுகள் நான்காம் கட்ட தளர்வுகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் நான்காம் கட்ட தளர்வில் என்னென்ன இருக்கும் என்பது குறித்த அறிவிப்புக்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளது.
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது, முகக் கவசம் அணிவது கட்டாயம், சமூக விலகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கபட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகள் செயல்பட வாய்ப்பில்லை.
பார்க்க இயங்க அனுமதி அளிக்கப்படலாம், அதில் உட்கார அனுமதி கிடையாது.
சமூக விலகலை பின்பற்றுவதை கருத்தில் கொண்டு திரையரங்குகள் திறக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
மும்பையில் புறநகர் ரயில் சேவைக்கு அனுமதி கிடையாது.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு செப்டம்பர் 1 முதல் அனுமதி வழங்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.