அமெரிக்க துறைமுகங்களில் சரக்கு கப்பல்களின் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படு என ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்க துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி தலைநகரான ரோம் நகரில் சரக்கு விநியோக சங்கிலி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில் கூறியதாவது, “நட்பு நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை மேலும் அதிகரிக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புக்கு தேவையானவற்றை கையிருப்பு வைத்து கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.
இதன் மூலம், ஏதேனும் ஒரு நாட்டில் பிரச்சினை எழுந்தால் மற்ற நாடுகளின் உதவியுடன் எளிதில் தீர்க்கலாம். அதோடு அனைத்து நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்புதான் மிகவும் முக்கியமானது” என்றும் கூறினார்.