நடிகராக வலம் வரும் நட்ராஜ் மீண்டும் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நட்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
தற்போது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அந்த புதிய படத்திற்கான படபிடிப்பு அந்தமானில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த பெயரிடப்படாத புதிய படம் சாய் சரவணன் தயாரிப்பில், எஸ்.ஜே.எஸ் பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுகிறது.
இந்த புதிய படத்தினை கே.பி.தனசேகர் இயக்குவதாகவும், ராம்கி, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் நடித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்தமானில் இந்த புதிய படத்திற்கான பாடல் காட்சிகள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.