மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லாமல் போயிருந்தால் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இந்தியாவால் சமாளிக்க முடிந்திருக்காது என்று பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கை என சமமான அளவில் கணக்கிடப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் சூழ்நிலையில், பாஜக தலைவர் ஜேபி நட்டா கொரோனா நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நம் பிரதமர் மோடி கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவுவதற்காக சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் தைரியமான முடிவுகளை எடுத்தார்.
மற்ற நாடுகள் சரியான முடிவை எடுக்க காலதாமதமானது. ஆனால் பிரதமர் மோடி அனைத்தையும் சரியாக செய்தார். மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லாமல் போயிருந்தால் நெருக்கடியான காலகட்டத்தில் இந்தியா இவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.