நடிகர் நட்டி நடராஜ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் நட்டி நடராஜ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படத்தில் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.