Categories
உலக செய்திகள்

நாட்டுல பஞ்சம் வந்துருச்சு…. உண்மையை ஒப்புக் கொண்ட வடகொரிய அதிபர்…!!!

நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா  நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் மூத்த தலைவர்களுடனான சந்திப்பில் தற்போது நாட்டில் உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது என்று தெரிவித்தார். இதற்கு காரணம்  கடந்த ஆண்டு ஏற்பட்ட பலத்த மழையால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் துறை உற்பத்தி இல்லாததால் இந்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியாவில் உணவு பொருட்கள் விலை அதிகரித்து காணப்படுவதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு கிலோ வாழைப்பழம் 45 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்படுவதாக (அதாவது இந்திய மதிப்பில் ரூ 3000) அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது .

மேலும் வடகொரியா  எரிபொருள், உணவு மற்றும் உரத்திற்கு சீனாவை நம்பியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக வடகொரியா நாட்டின் எல்லைகளை மூடியதால் ,சீனாவுடனான வர்த்தகமும் குறைய தொடங்கியது. இதையடுத்து பியாங்யாங்கில் நடந்த ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய கமிட்டியில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்று கொண்டு  உணவுப் பற்றாக்குறை குறித்து பேசியுள்ளார். மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது  இந்த காலாண்டில்  தேசிய தொழில் துறை வளர்ச்சி பெற்றுள்ளது என்று கூறினார் . இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான தொடர்பு  குறித்து அதிகாரிகள் ஆலோசிப்பார்கள்  என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த  நிலையில் இதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த ஏப்ரல் மாதமே அதிபர் கிம் ஜாங் உன் நாட்டில் மீண்டும் கடும் பஞ்சம் ஏற்படும் நிலை   இருப்பதால் இதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வீழ்ந்தபோது வட கொரியா எந்த ஒரு உதவியுமின்றி  . தனித்துவிடப்பட்டபோது ,சுமார்  30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை வட கொரிய அதிபர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது அரிதான  விஷயமாக கருதப்படுகிறது .

Categories

Tech |