Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒரு பழத்தில் இவ்வளவு பலன்களா…! தவிர்க்காதீர்கள்…

பழமையான பழங்களில் மாதுளைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலகமெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும்.

மாதுளையின் பலன்கள்:-

* உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும்.

* மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

* மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்திகொண்டவை.

* மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும்.

* தினமும் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்; ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

* அயல்நாடுகளில், பிறந்த குழந்தையின் மூளையில் எந்தப் பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

* திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

* மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும் துணைபுரியும்.

* பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடித்துவர  உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டிவிட்டு   எலும்புகள் வலுப்பெற உதவும்.

* தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம்பழச் சாற்றை அருந்தினால், ரத்த அழுத்தம் குறையும்.

* சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளார்கள்.

* தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

இத்தனை சத்துக்கள் நிறைந்த மாதுளம்பழத்தின் முத்துக்களை தினமும் ஒரு கைப்பிடியாவது சாப்பிடுங்கள். அதிலும் ஹைபிரிட் பழங்களைத் தவிர்த்து நாட்டுப்பழங்களைத் தேர்தெடுங்கள். மாதுளம்பழம் மகத்தானது… இதில் மாற்றுக்கருத்தே இல்லை!

Categories

Tech |