Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரகக் கல்… இந்த இலை இருந்தால் கரைத்து விடலாம்..!!

சித்தர்களாலும் முனிவர்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட துளசியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பத்து துளசி இலைகளை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து பொடி போல் செய்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் தண்ணீராக வற்றும் வரை காய்ச்சி சூடாக குடித்துவிட்டு சிறிது எலுமிச்சைச் சாறையும் அருந்த வேண்டும். இதனால் மலேரியா காய்ச்சல் விரைவில் குணமடையும்.

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை இலையுடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இதனை தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்.

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உருவாகி இதனால் வாய் துர்நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆறுவதற்கு துளசி இலைகளை பறித்து அதனை அரைத்து வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல அதன் சாறை குடிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் அனைத்தும் ஆறிவிடும். வாய் நாற்றமும் நீங்கி விடும்.

மன அழுத்தத்தை குறைக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்றாக மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி குடித்தால் மன அழுத்தம் நீங்கி விடும்.

துளசி இலையையும் புதினா இலையையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால் பல்லில் ஏற்பட்ட சொத்தை பற்கள் தொடர்பான நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.

ஒரு கைப்பிடி துளசி இலையை எடுத்து மூன்று மிளகு ஒரு துண்டு இஞ்சி அனைத்தையும் எடுத்து நன்றாக அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி விரைவில் குணமடையும்.

துளசி இலை ஊறிய நீரை 48 நாட்கள் குடித்து வந்தால் பித்தம் குறைந்து விடும். கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் தொடர்பான நோய்களே வராது.

தேமல் படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசினால் சரும நோய்கள் அனைத்தும் போய்விடும்.

Categories

Tech |