Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“முதல் மாவட்டம்-முதல் முறை” இயற்கை சுரங்கப்பாதை.. கொரோனாவை விரட்ட அட்வான்ஸான காஞ்சிபுரம்….!!

வேதிப்பொருட்கள் அல்லாத காய்கறி பழங்களில் இயற்கையாக உருவாக்கப்பட்ட கிருமி நாசினியை தெளிக்கும் சுரங்கப்பாதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா பாதிப்பை முற்றிலும் நீக்குவதற்கு ஒரே வழி நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அலுவலகம், வீடுகளையும் சுத்தமாக வைத்திருப்பது தான் என்பது நிதர்சனமான உண்மை. எனவே அலுவலகங்களிலும், வீடுகளிலும் மக்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை வாரத்தில் மூன்று முறையாவது மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இதிலும் அட்வான்ஸாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு சுரங்கப்பாதை ஒன்றை அமைத்துள்ளது.

இதில் இயற்கையான கிருமிநாசினி அதாவது வேதிப்பொருட்கள் அல்லாத காய்கறி பழங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கையான கிருமிநாசினி பொதுமக்கள் சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனம் மூலமாகவோ அல்லது நடந்து செல்லும்போதோ அவர்கள் மீது தானாக தெளிக்கப்படும். இந்த சுரங்கப் பாதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதன் முதலாக இயற்கை கிருமிநாசினியை தெளிக்கும் சுரங்கப் பாதை அமைக்கப்பட்ட இடம் காஞ்சிபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |