இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .
நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் .
விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே நாம் தினமும் அதி காலையில் சூரியஒளி படுமாறு நடக்க வேண்டும்.முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது . சாலமீனில் அதிகமாக விட்டமின் டி சத்து உள்ளது. பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றில் விட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது.
இயற்கையாகவே நமக்கு பாலில் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் மற்றும் அதிக அளவு கால்சியமும் உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களையும், வைட்டமின் டி சத்துக்களையும் பெற உதவும்.
மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் டி சத்தும், விட்டமின் ஏ சத்தும் உள்ளது. இது நம் குழந்தைகளுக்கு விட்டமின் குறைபாட்டால் ஏற்பட கூடிய நோயான ரிக்கட்டஸ் வர விடாமல் பார்த்து கொள்ளும்.