பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர்.
வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது.
அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்று பதிவிட்ட ட்வீட்டை, பலரும் மிகவும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Nature has filled every detail with precisel. Details which many a times we don't observe. Video by Maria Chacon. Believe me you have never seen such creature till now. #AmazingNature pic.twitter.com/jy0h9za8o0
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 16, 2020