Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார்சைக்கிளில்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

முயலை வேட்டையாட சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கனாம்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அ.கொல்லஅள்ளியை சேர்ந்த செல்வம், நரசிம்மன், சந்தனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் முயலை வேட்டையாட சென்றதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |