Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“குறும்பு செய்த மகன்” செல்போன் சார்ஜரால்…. உயிரை எடுத்த அப்பா…. கொடூர சம்பவம்…!!

தந்தை ஒருவர் தனது மகன் குறும்பு செய்ததால் கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முத்து- நீலா. இவர்களுடைய மகன் கார்த்திக். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு படுகாயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நீலா தன்னுடைய மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பிரேத பரிசோதனையில், சிறுவனின் கழுத்து நெரிக்கப்பட்டு கொன்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் கொலை செய்த நபர் யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திக்கின் தந்தை முத்து அளித்த வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாகஇருந்துள்ளது .

இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை காவல்துறையினர் விசாரித்து போது, தன்னுடைய மகன் கார்த்திக் அதிகமாக குறும்புத்தனம் செய்வது தனக்கு பிடிக்கவில்லை என்பதால், சிறுவனை சரமாரியாக தாக்கியத்துடன், செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெறித்து கொன்றதாக முத்து ஒப்பு கொண்டுள்ளார். இதையடுத்து முத்து மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |