Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டல்… கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி… எரித்து கொன்ற கொடூரம்…!!

மர்ம நபர்கள் கடற்படை அதிகாரியை கடத்தி சென்று எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே என்ற கடற்படை அதிகாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த சூரஜ்குமாரை கடந்த மாதம் 31 ஆம் தேதி 3 மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கடத்தி சென்றுவிட்டனர். இதனையடுத்து அவரை விடுவிக்க வேண்டுமானால் 10 லட்சம் ரூபாய் தரவேண்டும் என அந்த மர்ம நபர்கள் மிரட்டி இருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு காட்டுப் பகுதியில் கடத்தப்பட்ட இந்த கடற்படை அதிகாரியை எரித்து கொலை செய்துவிட்டனர். இவரின் கை கால்களை கட்டி வைத்த மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவரின் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள சிலர் சூரஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடல் முழுவதுமாக தீக்காயம் அதிகமாக ஏற்பட்டதால் மும்பை கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அதிகாரியை கடத்தி சென்று எரித்துக்கொலை செய்த குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |