நவாப் பழத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்
சளி ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,நாவ பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.
அதி அற்புத மருத்துவ குணங்களை கொண்ட முக்கிய பழம் நாவல் பழம். இது ரத்தத்தை முழுவதுமாக சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்கிறது. அஜீரண கோளாறை சரி செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தத்தையும், ரத்த சர்க்கரை அளவையும் சீராக பராமரிக்க கூடிய சக்தி நாவல் பழத்தில் உண்டு. அடிக்கடி காய்ச்சல், சளி மற்றும் இருமல் வருவதை தடுப்பதுடன் நோயெதிர்ப்பு ஆற்றலை பலமடங்கு அதிகமாக இருக்கிறது.