Categories
சினிமா தமிழ் சினிமா

அனுபவம் குறித்து பேசும் கலைஞகர்கள்….. ஓடிடியில் வெளியாகவுள்ள ஆந்தலாஜி திரைப்படம்…. ஆவலுடன் ரசிகர்கள்…!!

நவரசா திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் இயக்கிய கலைஞர்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தமிழ் திரையுலகில் உள்ள திறமையான கலைஞர்களை வைத்து ‘நவரசா’ என்ற ஆந்தலாஜி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் 9 மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் வியப்பு போன்றவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு பகுதியையும் பல்வேறு கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை Justickets நிறுவனம் சார்பாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படமானது நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வரும் 6ஆம் தேதி அன்று சுமார் 190 நாடுகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ஒவ்வொரு பகுதியையும் உருவாக்கிய  கலைஞர்கள் அவர்களின் அனுபவங்கள் குறித்து கூறியுள்ளனர்.

அதில் “புராஜக்ட் அக்னி” என்ற பகுதியை உருவாக்கிய கார்த்திக் நரேன் அவரின் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இந்த ‘புராஜக்ட் அக்னி’  பகுதியை பொறுத்தவரை எல்லா விஷயங்களும் என் வாழ்வில் மிகப் பெரிய பாடத்தை கற்று தந்துள்ளது. இது SCIENCE FICTION அடிப்படையில் உருவாகியுள்ளது. இந்த படம் முழுக்க ஒரு கனவு தான். இந்த கதையை கேட்டவுடன் என் நினைவிற்கு வந்தது முதலில் அரவிந்த்சாமி மற்றும் பிரசன்னா. இவர்களை உடனே தொடர்புகொண்டு பேசினேன். ஏற்கனவே நான் இவர்கள் இருவரிடமும் பணிபுரிந்து உள்ளேன். மேலும் கதாபாத்திரங்களை ஒழுங்காக அமைக்கும் பொருட்டு அரவிந்த்சாமி, பிரசன்னா மற்றும் பூர்ணா ஆகிய மூவரும் குழுவாக இணைந்து செயல்பட்டனர். அனைத்து கதாபாத்திரங்களும் இக்கதையில் பொருத்தமாக பொருந்தியுள்ளது. இந்த படம் மிக அழகாக வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து நவரசா திரைப்படத்தில் ‘துணிந்த பின்’ பகுதியை எடுத்த சர்ஜுன் KM அவரின் அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில் “இப்படத்தின் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மிகவும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அவர்களின் உதவி இல்லாமல் இந்த பகுதியை என்னால் எடுத்திருக்க இயலாது. மேலும் படத்தின் மொத்த காட்சிகளும் தென்காசி மாவட்டத்திற்கு அருகிலுள்ள அச்சன்கோவிலிலும்  மழை தூரம் மலைப் பகுதியிலும் வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இது எங்கள் அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது. இந்த படப்பிடிப்பானது மொத்தம் 5  நாட்களிலேயே முடிவடைந்து விட்டது. இதில் விடுபட்ட காட்சிகளை மட்டும் ஒருநாள் எடுத்தோம் என்றும் இப்படமானது எங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்” எனக்  கூறியுள்ளார்.

Categories

Tech |