நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது.
50 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை உள்ள கொலு பொம்மைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். சக்தியின் அருள் வேண்டி ஒன்பது தினங்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவராத்திரி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, கோட்டாறு போன்ற பல்வேறு பகுதிகளில் பொம்மைகளின் விற்பனை விருவிருப்பு அடைந்து உள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஏராளமானோர் கடைகள் அமைத்துள்ளதால், கடவுள் சிலைகள் போன்றவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.