தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவில் நவராத்திரியும் ஒன்றாகும். இந்த நவராத்திரி பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரள மாநிலத்திலும் ஆயுத பூஜையுடன் (ஒன்பதாவது நாளில்) சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பத்தாவது நாளில் தசராவுடன் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நவராத்திரி காலத்தில் நான்காவது நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவது வழக்கம். மேலும் அங்கு இந்த பூஜையானது சரஸ்வதி ஆவாஹனத்துடன் தொடங்கி, மூன்றாவது நாள் சரஸ்வதி பலி தான் செய்யப்பட்டு, சரஸ்வதி விசாகத்துடன் விழாக்கள் முடிகிறது.
நாம் கொண்டாடும் சரஸ்வதி பூஜையின் சிறப்பு என்னவென்று தெரியுமா? அறிவு மற்றும் ஞானத்தின் சொரூபமாய் இருப்பவள்தான் தாய் சரஸ்வதி தேவி. இதனால் சரஸ்வதி தேவியை நாம் வழங்கினால் நமக்கு அறிவும் ஞானமும் கிடைத்து வளம் பெறுவோம் இதுவே அதன் சிறப்பாகும்.
இந்த பண்டிகை ஆனது மிகவும் பிரம்மாண்டமாகவும் மதிக்கக்கூடிய பண்டிகைகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவில் 4 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சரஸ்வதி பூஜையின் அடுத்த நாளில் அவர்களின் வித்யா ரம்பம் அல்லது அக்ஷரா அபியாசம் விழாவை தொடங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் சரஸ்வதி பூஜையின் போது ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். இந்த கொலுவில் தெய்வங்கள், விலங்குகள், பறவைகள், கலை படைப்புகள், ஆன்மீக ஆளுமைகள் என சிறு சிறு வடிவங்களை காட்சிப்படுத்தபடுகிறது. மேலும் கொலு வைக்காத வீட்டில் சரஸ்வதி தேவியை பூஜை செய்வதற்கு அவருடைய படம் அல்லது சிலையை பயன்படுத்துகின்றனர்.
இந்த பூஜையில் பல பிரசாதங்களை சரஸ்வதி தேவிக்கு படைக்கபடுகிறது. குறிப்பாக வெள்ளை நிறம் தான் சரஸ்வதி தேவியாருக்கு மிகவும் விருப்பமான நிறமாக கூறப்படுகிறது. இதனால் படைக்கும் பிரசாதங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே செய்யப்படுகின்றது. மேலும் சரஸ்வதி தேவியாருக்கு வெள்ளைப் பூக்களால் செய்யப்பட்ட மாலையும் அணிவிக்கப்படுகிறது. இதனால் அவரது அருளும் ஆசீர்வாதங்களும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது என அனைவரும் நம்புகின்றனர்.
குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த நாளில் படிப்பில் பலவீனமாக இருக்கும் குழந்தைகள் சரஸ்வதி தேவியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல்களையும் ஸ்லோகங்களையும் உச்சரித்தால் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால் சரஸ்வதியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கிறது என்று கூறுகின்றனர். இப்போது நவராத்திரியின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வோம். இந்த திருவிழா ஞானம், அறிவு, கலை மற்றும் கல்வியின் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புராணங்கள் படி பார்த்தால் சரஸ்வதி தேவி மகிஷாசுரன் என்ற அரக்கனை கொள்ள சக்தி வாய்ந்த ஆயுதங்களை உருவாக்கினாள்.
அதன் பின் ஆயுதங்கள் புனிதமானவை என்று கருதப்பட்டு மக்கள் அவற்றையெல்லாம் வணங்கத் தொடங்கியுள்ளனர். இந்த பாரம்பரியத்தை மக்கள் இன்று வரை பின்பற்றி ஆயுத பூஜை என்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இந்த நாளில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கருவிகள் மற்றும் ஆயுதங்களை வணங்குவர். தென்னிந்தியாவை பொருத்தவரை நவராத்திரியின் போது முதல் 8 நாட்கள் சக்தி தேவியின் பல்வேறு அவதாரங்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது மற்றும் அதன் கடைசி நாளான பத்தாவது நாளில் சரஸ்வதி தாயாருக்கு அர்ப்பணிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது.