ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் தொடர்ந்து 5_ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலோடு சேர்த்து ஆந்திர , ஒடிசா போன்ற மாநிலங்களின் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதளம் 112 தொகுதிகளை கைப்பற்றி தொடர்ந்து 5_ஆவது முறையாக வெற்றி பெற்றது. அதே போல மக்களவையில் உள்ள 21 தொகுதிகளில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சட்டசபையில் பிஜூ ஜனதாதளம் வெற்றியை தொடர்ந்து அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்ட நவீன் பட்நாயக் 5_ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையடுத்து அவர் அம்மாநில கவர்னர் கணேஷி லாலை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியதுடன், தன்னை ஆதரிக்கும் 112 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கி இருந்தார். புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து நவீன் பட்நாயக்குக்கு அழைப்பு ஒடிசா மாநில முதல்வராக 5-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.