Categories
அரசியல்

நவீன யுகத்தில் மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் மன நோய்கள்…. மன அமைதிக்கு இதோ சில டிப்ஸ்கள்…!!!

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடூர நோய்களில் இதய நோய்களை அடுத்து புற்று நோய்கள் தான் இருக்கிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே ஆகும். இந்த வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும்.புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7ஆம் தேதி நாடும் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இன்றைய நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நம் வாழ்வில் எப்போதும் அவசர போக்கைத் தான் காண முடிகின்றது.  யாரும் ஆற அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சொல்லப்போனால், இத்தகைய வாழ்க்கை சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது. இத்தகைய சூழலில் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு அடையாளமே சரியான உடலமைப்பு ஆகும். சரியான உடலமைப்பு எந்த ஒரு உடல்நல கோளாறுகளையும் தருவதில்லை. ஆகவே அவ்வாறு சரியான உடலமைப்பைப் பெற நினைத்தால் ஜிம்மிற்கு செல்வது, உணவில் கவனமாய் இருப்பது போன்றவை மட்டும் போதாது. சில வாழ்க்கை முறைகளையும் மாற்றி கொள்ளுதளை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

அதாவது, உளவியல் ரீதியாக ஆரோக்கியமான வாழ்வுக்கு போதுமான தூக்கம் அடிப்படையானது. இரவில் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். இது மனநலத்தை மேம்படுத்த‌ மிகவும் உதவிகரமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து இயற்கையாக உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அவசர நிலையின் போது மட்டுமே சுரக்குமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக நாம் பல நேரம் அவசர நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதன் மூலம் உடலும் மனமும் அதிகமாக பாதிக்கப்படுகிறது. எனவே அமைதியான வாழ்க்கை முறையை மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். எதையும் நிதானத்துடன் செய்வதற்கு பழக வேண்டும். அதுமட்டுமில்லாமல் சிரிப்பதற்கும், இயற்கையை ரசிப்பதற்கும், குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உறவுகளோடு பேசுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மனதிற்கு பிடித்த விஷயங்களை கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை முறையில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வந்தால் நோய் நொடி இல்லாமல் சிறப்பாக வாழ முடியும்.

 

Categories

Tech |