உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடூர நோய்களில் இதய நோய்களை அடுத்து புற்று நோய்கள் தான் இருக்கிறது. புற்றுநோய் என்பது உடலில் உள்ள உயிரணுக்களில் ஒழுங்கற்ற விபரீதமான வளர்ச்சியே ஆகும். இந்த வளர்ச்சியானது மற்ற சாதாரண உயிரணுக்களின் வளர்ச்சியை விட மிக அதிகமாக இருப்பதால் பக்கத்தில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை உடையது ஆகும். இந்த புற்றுநோய் எங்கோ? யாருக்கோ? உள்ளது என்று இருந்தது. தற்போது இந்தியாவில் புற்றுநோயற்றோர் வாழும் ஊர்கள் இருக்கின்றதா என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
புற்றுநோய் குறித்து இந்தியாவில் விழிப்புணர்வு செய்ய தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7ஆம் தேதி நாடும் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நம் வாழ்வில் எப்போதும் அவசர போக்கைத் தான் காண முடிகின்றது. வாழ்க்கையின் அவசரங்கள் மனிதர்களை ஓட வைக்கிறது. யாரும் சிறிது நேரம் கூட அமர்ந்து தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் இல்லை. சொல்லப்போனால், இத்தகைய வாழ்க்கை சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது. இத்தகைய சூழலில் நம்ம வாழ்க்கை முறை மாறிவிட்டது. இதனால் கொடிய நோய்களில் நாம் பாதிக்கப்படுகிறோம். நோய்களில் தப்பிக்கும் வழிமுறைகளை பார்ப்போம்.
அதாவது உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்தும். தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். நோய்களின் அபாயத்தை குறைக்கும். எனவே வாரத்தில் 5 நாட்கள் மிதமான உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் ஆரோக்கியமான உணவு உடலுக்கு ஊட்டம் அளிக்கும். எந்த காரணத்திற்காகவும் உணவை தவிர்க்கக்கூடாது. மாவுச்சத்து, பழங்கள், காய்கறிகள், பால், மீன் மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை சாப்பிடலாம். பல வண்ணங்கள் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து உடல் மற்றும் மனநலத்திற்கு அடிப்படையானது. காபி, வெள்ளை சர்க்கரை போன்றவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். இவை அனைத்தும் நமக்கு ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும்.